பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

缘 138 常 இராமலிங்க அடிகள் இந்தியமாய்க் கரனாதி அனைத்து மாகி இயல்புருட னாய்க்கால பரமு மாகிப் பந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி வந்தஉப சாந்தமதாய் மவுன மாகி மகாமவுன நிலையாகி வயங்கா நின்ற அந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும் அசிட்தமாய் அதீதமாய் அமர்ந்த தேவே (7) அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும் அளவர்கி அளவாத அதீத மாகிப் பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம் பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும் பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும் பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம் கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக் கொழுங்கடவுள் தருவாகிக் குலவுத் தேவே (11) உருவாகி உருவினுள் உருவ மாகி உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய் அருவாகி அருவினில் உள் அருவ மாகி அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க் குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக் குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற மருவாகி மலராகி வல்லி யாகி மகத்துவமாய் அனுத்துவமாய் வயங்குந் தேவே (14) மலைமேலும் கடல்மேலும் மலரின் மேலும் வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக் கலைமேலும் ம்ைபோல்வார் உளத்தின் மேலும் கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும் தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும் தருமன்பின் மேலும்வளர் தாண்மெய்த் தேவே (21)