பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

案 甚4C 苓 - இராமலிங்க அடிகள் தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச் சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே (45) பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம் புகுந்துகலத் திடநிறைவாய்ப பொங்கி ஓங்கும் கங்குகரை காணாத கடலே எங்கும் கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர் தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாம் தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச் செங்குமுத மலரவரு மதியே எல்லாம் செய்யவல்ல கடவுளே தேவ தேவே (48) மெய்யுணர்த்த வாதவூர் மலையைச் சுத்த வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும் பொய்யுணர்த்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம் புரிந்தருளும் கருணைவெள்ளம் பொற்பே அன்பர் கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம் கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே (52). பேராய அண்டங்கள் பலவும் பிண்ட பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின் வாராய பலபொருளும் கடலும் மண்ணும் மலையுளவும் கடலுளவும் மணலும் வானும் ஊராத வான்மீனும் அணுவும் மற்றை - . உள்ளளவும் அளந்திடலாம் ஓகோ உன்னை ஆாலும் அளப்பரிதென்றளந்த வேதம் அறைந்திளைக்க அதிதூரமாகுந் தேவே (54) உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற உருஅருவ மொன்றும்இவை உடல்மேல் உற்ற ஒருநான்கும் இவைகடந்த ஒன்றுமாய்அவ் வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே