பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 莎 41,梁 இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும் எண்ணான்கின் மேலிருந்தும் இறையே மாயைக் கருநான்கும் பொருள்நான்கும் காட்டு முக்கட் கடவுளே கடவுளர்கள் கருதும் தேவே (57) எழுத்தறிந்து தமைஉணர்ந்த யோகர் உள்ளத் தியலறியாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி பழுத்தளித்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப் பதம்பொருந்த அநுபவிக்கும் பதமே மாயைக் கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும் கடுந்தொழிலோர் நமக்கேநற் கருணை காட்டி விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே (59) அருமறையா கமங்கள்முதல் நடுவி றெல்லாம் அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக் கருமறைந்த உயிர்கள்தொறும் கலந்து மேவிக் கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத் திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும் திகழ்கருணை நடம்புரியும் சிவனே மோனப் பெருமலையே பரம்இன்ப நிலையே முக்கட் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே (67) தானாகித் தானல்ல தொன்று மில்லாத் தன்மையனாய் எவ்வெவைக்கும் தலைவ னாகி வானாகி வளியனலாய் நீரு மாகி மலர்தலைய உலகாகி மற்று மாகித் தேனாகித் தேனினறும் சுவைய தாகித் தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே (69) ஆனேறும் ப்ெருமானே அரசே என்றன் ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்