பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 常 143 露 வன்கொடுமை மலநீக்கி அடியார் தம்மை வாழ்விக்கும் குருவேநின் மலர்த்தாள் எண்ண முன்கொடுசென் றிடுமடியேன் தன்னை இந்த மூடமனம் இவ்வுலக முயற்சி நாடிப் பின்கொடுசென் றழைந்திழுக்கு தந்தோ நாயேன் பேய்பிடித்த பித்தனைப்போல் பிதற்றா நின்றேன் என்கொடுமை என்பாவம் எந்தாய் எந்தாய் - என்னுரைப்பேன் எங்குறுவேன் என்செய் வேனே (78) கற்றவனை தனக்கும்.உண வளிக்கும் உன்றன் கருணைநிலை தனைஅறியேன் கடையேன் இங்கே எற்றவளை எறும்பேபோல் திரிந்து நாளும் இளைத்துநின தருள்காணா தெந்தாய் அந்தோ பெற்றவளைக் காணாத பிள்ளை போலப் பேதுறுகின் றேன்செய்யும் பிழையை நோக்கி இற்றவளைக் கேள்விடல்போல் விடுதி யேல்யான் என்செய்வேன் எங்குறுவேன் என்சொல் வேனே (81) எனையறியாப் பருவத்தே ஆண்டு கொண்ட என்னரசே என்குருவே இறையே இன்று மனையறியாப் பிழைகருது மகிழ்நன் போல மதியறியேன் செய்பிழையை மனத்துட் கொண்டே தனையறியா முகத்தவர்போல் இருந்தாய் எந்தாய் தடங்கருனைப் பெருங்கடற்குத் தகுமோ கண்டாய் அனையறியார் சிறுகுழவி யாகி இங்கே - அடிநாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ (35) எம்பெருமன் நின்விளையாட் டென்சொல் கேன்நான் ஏதுமறியாச் சிறியேன் எனைத்தான் இங்கே செம்புனலால் குழைந்தபுலால் சுவர்சூழ் பொத்தைச் சிறுவிட்டில் இருட்டறையில் சிறைசெய் தந்தோ கம்பமுறப் பசித்தழலும் கொளுந்த அந்தக் கரணமுதல் பொற்புலப்பேய் கவர்ந்து சூழ்ந்து