பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் * 145 + உற்றாயும் சிவபெருமன் கருணை ஒன்றே உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன் பொற்றாளை விரும்பியது மன்று ளாடும் பொருளே.என் பிழையனைத்தும் பொறுக்க வன்றே (95) அன்பர்திரு உளங்கோயி லாகக் கொண்டே அற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத் துன்பவடி வுடைப்பிறரில் பிரிந்து மேலோர் துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம் இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ எள்ளளவென் சொல்கேனிவ் வேழை யேனே. (98) அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும் ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம் தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம் மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய் வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில் இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே (100) எதை விடுவது என்று அறிய முடியாத நிலை. ஏதோ என் உள்ளங்கவர்ந்தவற்றை மட்டிலும்தான் ஈண்டு எடுத்துக் காட்டியுள்ளேன். இவற்றை நம் நெஞ்சு நெக்குவிடப் பாடி அநுபவித்தால் வள்ளலாரின் திருவுள் ளத்துடன் நம் உள்ளமும் கலந்து மகிழ வாய்ப்பு ஏற்படும். 6. திருவருள் முறையீடு: கட்டளைக் கலித்துறையாப் பில் அமைந்த 232 பாடல்களைக் கொண்டது இப்பகுதி. தம் குறைகளிருப்பினும் அவற்றைக் களைந்து தம்மை உய்யும் நெறியில் செலுத்துமாறு திருவருளை வேண்டு கின்றார் அடிகள். இதில் சில பல பாடல்களைக் காட்டு வேன். இராம.-11