பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 岑 153 笨 திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம்என் பாவிச் சிறுபிழைப்பைச் சொரிகின்ற புண்ணில் கனலிடல் போலெனுந் தோறுநெஞ்சம் எரிகின்ற தென்செய்கு வேன்பிறை வார்சடை என்னமுதே (223) இறையேற்று துன்பக் குடும்ப விகார இருட்கடலில் புரையேற்று நெஞ்சம் புலர்ந்துநின் றேனைப் பொருட்படுத்திக் கரையேற்ற வேண்டுமென் கண்ணே பவத்தைக் கடிமருந்தே திரையேற்று செஞ்சன்டத் தேவே அமரர் சிகாமணியே (232) இப்பாடல்கள் யாவும் பாடிய வாய் தேனுறும் பான்மையன. பாடியவர்களை அநுபூதி நிலையை எய் தச் செய்து பரத்தின் திருவடிகளை எட்டும்படிச் செய் ଈli ଈit. 7. சிகாமணி மாலை: பதினைந்து பாடல்களைக் கொண்ட இம்மாலை புள்ளிருக்கு வேளுரில் எழுந்த ருளி யிருக்கும் வைத்திய நாதர் புகழ்பாடுவதாகக் கட்ட ளைக் கலித்துறையாப்பில் அமைந்தது. இந்தப் பெருமா னைக் காளமேகப் புலவர், 'மருகிருக்கும் வேளுரில் வைத்திமகன் குறமகளை மணந்தான் என்று உருகியரன் நஞ்சுண்டான்' என்று கற்பனை நயந்தோன்றக் குறிப்பிடுவர். இப்பெரு மான் பற்றிய பாடல்களில் ஒரு சிலவற்றில் ஆழங்கால் பட்டு அநுபவிப்போம்.