பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 154 禄 இராமலிங்க அடிகள் வல்வினை யேனைஇவ் வாழ்க்கைக் கடல்நின்றும் வள்ளல்உன்தன் நல்வினை வாழ்க்கைக் கரைஏற்றி மெய்அருள் நல்குகண்டாய் கொல்வினை யானை உரித்தோல் வயித்திய நாத குன்றார் செல்வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே (1) கல்லேன் மனக்கருங் கல்லேன் சிறிதும் கருத்தறியாப் பொல்லேன்பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறைசிறிதும் இல்லேன் எனினும்நின் பால்அன்றி மற்றை இடத்தில்சற்றும் செல்லேன் வயித்திய நாதா அமரர் சிகாமணியே (3) நானே நினக்குப் பணிசெயல் வேண்டும்நின் நாள்மலர்த்தாள் தானே எனக்குத் துணைசெயல் வேண்டும் தயாநிதியே கோனே கரும்பின் சுவையே செம் பாலொடு கூட்டுநறும் தேனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே (5) ஐவாய் அரவில் துயில்கின்ற மாலும் அவனும்தங்கள் கைவாய் புதைத்தும் பணிகேட்க மேவும்முக் கண்அரசே பொய்வாய் விடாஇப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்நீ