பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 豪 155 苓 செய்வாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே (8) ஊன்கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும்பிணியால் நான்கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்திய நாதனன்றே வான்கொண்ட நின்அருள் சிரேத்து கின்ற வகைஅறியேன் தேன்கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே (13) மால்விடை மேற்கொண்டு வந்தெளி யேனுடை வல்வினைக்கு மேல்விடை எந்திட வேண்டுங்கண் டாய்.இது வேசமயம் நீல்விட முண்ட மிடற்றாய் வயித்திய நாதநின்பால் சேல்விடு வாட்கண் உமையொடும் தேவர் சிகாமணியே (15) எல்லாப் பாடல்களும் சிகாமணியே என்று இறுகின் றன என்பது நோக்கத்தக்கது. பாசுரங்களை உளந் தோய்ந்து ஈடுபட்டுப் பாடி அநுபவித்தால் அவை வள்ளல் பெருமான் எட்டிய அநுபூதி நிலையை எட்ட முடியும் என்பது அடியேனின் அதிராத நம்பிக்கை. இப்புள்ளிருக்கும் வேளுர் பற்றி 12 பாடல் கொண்ட, பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தத் தால் அமைந்த பகுதி ஒன்றும் (8), சிந்து மெட்டில் அமைந்த 29 பாடல்களைக் கொண்ட 'நல்ல மருந்து' என்ற தலைப்பில் (9) நடைபெறும் பகுதி ஒன்றும் உள்ளது.