பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 岑 159 举。 வருணக் கொலைமா பாதகனாம் மறையோன் தனக்கு மகிழ்ந்தன்று தருணக் கருணை அளித்தபுகழ் , என்னாம் இந்நாள் சாற்றுகவே, (6) உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநா ளேனும் ஒழிந்திடவும் வெள்ளக் கருனை இறையேனும் மேவி விடவும் பெற்றறியேன் கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன். எனினும் கடையேனைத் தள்ளத் தகுமோ திருஆரூர்த் எந்தாய் எந்தாய் தமியேனே. (8) இருப்பு மனத்துக் கடைநாயேன் என்செய் வேன்நின் திருஅருளாம் பொருப்பில் அமர்ந்தார் அடியர்எலாம் அந்தோ உலகப் புலைஒழுக்காம் திருப்பில் சுழன்று நான்ஒருவன் திகைக்கின் றேன்.ஓர் துணைகாணேன் விருப்பில் கருனை புரிவாயோ ஆரூர் தண்ணார் வியன்அமுதே. (10) பாடல்களை உள்ளம் உருகிச் சேவித்தால் அடி களாரின் அநுபவத்தை நாமும் பெறலாம். 12. கலைமகள் வாழ்த்து: நாவின் கிழத்தியை அடி களார் மூன்று பாடல்களால் வாழ்த்துகிறார். பாக்கள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. அவற்றுள் ஒன்று: கலைபயின்ற உளத்தினிக்கும் கரும்பினைமுக் கனியை.அருட் கடலை ஓங்கும் நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த நான்முகனார் நீண்ட நாவின்