பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓 162 岑 இராமலிங்க அடிகள் ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும் ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான் சோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால் தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண் பூதிமலை சுத்தஅது பூதிமலை எல்லா பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர் பாதிமலை முத்தரெல்லாம் பற்றுமலை என்னும் பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் உலகே (1) சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த சாந்தர்உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில் துக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம் சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான் ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநேல் அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற் பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும் பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் உலகே (2) இரண்டு பாடல்களிலும் 'பழமலையைக் கிழமலை யாய்ப் பகருவதென் உலகே என அருளியதில் அரிய நயம் காணலாம். இத்தலத்தின் பெயர் முதுகுன்றம்; பழமலை. ஆயினும் இன்று உலகம் இதனை 'விருத்தா சலம் என்றே வழங்குகின்றது. ‘விருத்தம்’ என்ற சொல் 'முதுமை’ எனப் பொருள்பட்டு கிழத்தன்மையைக் குறிக்குமேயன்றிப் பழைமையைக் குறிக்காது. ஆதலின் முதுகுன்றைப் பழமலை என்னல் சிறப்பேயன்றி ‘விருத்தாசலம்’ என்னல் சிறப்பன்று. அங்ங்னம் கூறின் அது கிழமலையாம் பழமலைப் பதிகத்தில் தாம் கண்ட காட்சியை இனிதாகப் பாடுவதை மேலே குறிப்பிட்ட (13)-வதில் 'திருமால் கமலத் என்ற முதற்குறிப்புடைய பாடலில் (1) கண்டு மகிழலாம்.