பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 米 163 笨 16. திருவண்ணாமலைப் பதிகம்: திருவண்ணா மலை, பெரியோர்கள் பலராலும் போற்றித் துதிக்கப் பெற்ற தலம் 'கற்றார் தொழும் அருணாசலம்’ என்று புகழ் பாடுவார் வில்லிபுத்துராழ்வார். அண்ணாம லைக்கு அரோகரா’ என்ற முழக்கம் இத்தலத்தில் பெருகி வழங்கும். இத்திருமலைமேல் அடிகள் எழுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்த யாப்பில் பத்துப் பாடல்கள் அருளியுள்ளார். அவற்றுள் சிலவற்றுள் ஆழங்கால் பட்டு அநுபவிப்போம். அன்பர்தம் மனத்தே இன்பமுற் றவைகள் அளித்தவர் களித்திடப் புரியும் பொன்பொலி மேனிக் கருனையங் கடலே பொய்யனேன் பொய்மைகண் டின்னும் துன்பமுற் றலையச் செய்திடேல் அருனைத் தொல்நக ரிடத்துன தெழில்கண்டு என்புளம் உருகத் துதித்திடல் வேண்டும் இவ்வரம் எனக்கிவண் அருளே (2) அருள்பழுத் தோங்கும் ஆனந்தத் தருவே அற்புத அமலநித் தியமே தெருள்பழுத் தோங்கும் சித்தர்தம் உரிமைச் செல்வமே அருனையந் தேவே இருள்பழுத் தோங்கும் நெஞ்சினேன் எனினும் என்பிழை பொறுத்துநின் கோயில் பொருள்பழுத் தோங்கும் சந்நிதி முன்னர்ப் போந்துனைப் போற்றுமா றருளே (3) அருட்பெருங் கடலே ஆனந்த நறவே அடிநடு அந்தமும் கடந்த தெருட்பெரு மலையே திருஅனா மலையில் திகழ்சுயஞ் சோதியே சிவனே மருட்பெருங் கடலின் மயங்குகின் றேன்என் மயக்கெலாம் ஒழிந்துவன் பிறவி