பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

※ 164 苓 இராமலிங்க அடிகள் இருட்பெருங் கடல்விட் டேறநின் கோயிற் கெளியனேன் வரவரம் அருளே. (3) ஏதுசெய் திடினும் பொறுத்தருள் புரியும் என்உயிர்க் கொருபெருந் துணையே தீதுசெய் மனத்தார் தம்முடன் சேராச் செயல்எனக் களித்தஎன் தேவே வாதுசெய் புலனால் வருந்தல்செய் கின்றேன் வருந்துறா வண்ணம்ஏற் றருளித் தாதுசெய் பவன்ஏத் தருணையங் கோயில் சந்நிதிக் கியான்வர அருளே. (10) அண்ணாமலைபற்றி அருமையான பாடல்கள் இவை. "அருணகிரி விளங்க வளர்ந்த சிவக்கொழுந்து’ என்ற தலைப்பில் (17) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் ஒர் அற்புதமான பாடல் உள்ளது. ஒரே பாடல் இது. அது இது: திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச் சிவஞான நிலைவிளங்கச் சிவாதுபவம் விளங்கத் தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க உலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம் மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க வயங்கருணை கிரிவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே (1) இதனைப் பாடிப் பாடி பக்தியுடன் அநுபவித்தால் அண்ணாமலையாரை மனக்காட்சியில் கண்டு களிக்க லாம். 21. சிங்கபுரிக் கந்தர் பதிகம். இதில் காப்பாக நேரிசை வெண்பா ஒன்றும், அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பத்தும் அடக்கம். பாடல்கள் யாவும் கந்தவேளைப் பற்றியவை. பாடல்கள் யாவும்