பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邻 巢66 影 இராமலிங்க அடிகள் என்செயலில் இரவுபகல் ஒழியாமல் போற்றியிட இரங்கா தென்னே தென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. (8) மாசகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின் ஆசின்தவப் பேறளிக்க வள்ளிமலை தனைச்சார்ந்தே அங்குக் கூடி நேசம்மிகு மணம்புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய் தேசுலவு பொழில்குழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. இவற்றை உள்ளம் உருகிப் பாடிப் படித்தால் கந்தவேள் நம் மனத்தில் எழுந்தருள்வான் என்பது என் அதிராத நம்பிக்கை. விநாயகர் பதிகங்கள். இவை நான்கு பதிகங்கள். எல்லாக் கடவுளர்கள் கையிலும் ஏதோ ஒருவகை ஆயு தமிருக்க இவர் கையில் எந்தவித ஆயுதமும் இல்லா திருத்தல் சிந்திக்கத்தக்கது. பக்தர்கட்கு நேரிடும் ஆபத்து களைத் தம் சங்கல்ப்பத்தாலே போக்கி விடுகின்றார் என்பது ஐதிகம். இங்ங்னம் விக்கினங்களைத் தீர்ப்ப தால்தான் இவர் 'விக்கினேசுவரர்' என்ற பெயரையும் பெற்றுள்ளார். இனி இவர்பற்றிய பதிகங்களில் கவனம் செலுத்துவோம். . . 22. சித்தி விநாயகர் பதிகம்: இது காப்புபோல் இரண்டு நேரிசை வெண்பாக்களையும் நூலில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த ஒன் பது பாடல்களையும் கொண்டது. பாடல்கள் யாவும் 'சித்தி விநாயக விக்கினேச் சுரனே என்று முடிகின்றன. அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான் அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் - அஞ்சுமுக