பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

塔 17G 苓 இராமலிங்க அடிகள் என்னை வேண்டிஎ னக்கருள் செய்தியேல் இன்னல் நீங்கும்நல் இன்பமும் ஓங்கும்நின் தன்னை வேண்டிச்ச ரண்புகுந் தேன்.என்னைத் தாங்கிக் கொள்ளும்ச ரண்பிறி தில்லைகாண் அன்னை வேண்டிஅ மும்மகப் போல்கின் றேன்அறிகி லேன்நின்தி ருவுள்ம் ஐயனே நின்னை வேண்டிய செஞ்சடை யாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே (3) தஞ்சம் என்றுனைச் சாந்தனன் எந்தைநீ தானும் இந்தச் சகத்தவர் போலவே வஞ்சம் எண்ணிஇ ருந்திடில் என்செய்வேன் வஞ்சம் அற்றம னத்துறை அண்ணலே பஞ்ச பாதகம் தீர்த்தனை என்றுநின் பாத பங்கயம் பற்றினன் பாவியேன் விஞ்ச நல்அருள் வேண்டித்த ருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே (5) மண்ணில் ஆசைம யக்கற வேண்டிய மாத வர்க்கும்ம திப்பரி யாய்உனை எண்ணி லாச்சிறி யேனையும் முன்நின்றே ஏன்று கொண்டனை இன்றுவி டுத்தியோ உண்ணி லாவிய நின்திரு உள்ளமும் உவகை யோடுவர்ப் பும்கொள ஒண்னுமோ வெண்ணி லாமுடிப் புண்ணிய மூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே (7) நாவி னால்உனை நாள்தொறும் பாடுவார் நாடு வார்நமை நண்ணிப்பு கழவும் ஓவி லாதுனைப் பாடவும் துன்பெலாம் ஒட வும்மகிழ் ஓங்கவும் செய்குவாய் காவி நேர்களத் தான்மகிழ் ஐங்கரக் கடவு ளேநற்க ருங்குழி என்னும் ஊர் மேவி அன்பர்க்க ருள்கண நாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே (10)