பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந் திருமுறைப் பாடல்கள் 零 181 霹 அனையே அணையாய் திருக்குறிப்பை அறியேன் ஈதென் றடியேனே (15) நின்பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடுவினையேன் வன்பால் மனப்பேய் தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன் தென்பால் நோக்கி இன்பநடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா முன்பால் அமுதக் கடல்அளித்த முதல்வா என்னை முன்னுதியே (22) இப்பாடல்களை உள்ளம் உருகிப் பாடி அநுபவித்தால் நாமும் வள்ளலாரின் மனநிலையை எய்திவிடுவோம் என்பது திண்ணம். - 11. கலி விண்ணப்பம் கட்டளைக் கலித்துறை யாப்பால் அமைந்த பத்துத் திருப்பாடல்களைக் கொண் டது இப்பதிகம். தாம் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்தருளி மன்னிக்குமாறு விண்ணப்பிக்கும் பாங் கில் அமைந்தவை இப்பதிகப் பாடல்கள். நான்கு பாடல் களில் ஆழங்கால் படுவோம். செறியாத நெஞ்சக வஞ்சக னேன்.இச் சிறுதலத்தே. அறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஜயநின்தாள் குறியா தரித்தல தானைமற் றில்லைஎங் கொற்றவனே முறியா தருள்செய்தி யோதெரி யேன்.எந்தனை முன்னியதே (1) எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்