பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宰 182 米 இராமலிங்க அடிகள் பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய் கல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டது.துன் பல்லால் அனுத்துணை யும்அறி யேன்.இன்பம் ஆவதுவே. (3) ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய் இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்.உன் கழல்அடிக்கே துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்.என் துணிவதுவே (8) பள்ளத்தி லேசெலும் நீர்போல்என் உள்ளம் பரப்பதலால் எள்ளத்தி லேசிறி தாயினும் நாள்செல்வ தில்லைஎந்தாய் கள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன் உள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே (10) இந்த நான்கு பாடல்களையும் உள்ளம் கரைந்து பாடி வள்ளற்பெருமான் பெற்ற அநுபவத்தை நாமும் பெறு வோமாக. 12. அடிமைப் பதிகம்; தம்மைத் தன் திருவடிக்கீழ் அடிமை கொள்ள வேண்டும் என வள்ளல் பெருமான் இறைவனை வேண்டுவதாக அமைந்தது இப்பதிகம். எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் ஆழங்கால் படுவோம்.