பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந் திருமுறைப் பாடல்கள் 常 廷83 港 ஆள்வினையால் பயன்உறுவர் அசதி ஆட அந்தோஇப் புலைநாயேன் அன்பால் நின்பால் வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும்.இதற் கெம்பெருமான் கருணை செய்யும் நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன் கேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன் கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயோ (1) என்னைஅறி யாப்பருவத் தாண்டு கொண்ட என்.குருவே எனக்குரிய இன்ப மேஎன் தன்னை இன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ தகுமோதின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய் உனைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய் முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னை (4) வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும் மாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும் தகைஅறியேன் நலம் ஒன்றும் அறியேன் பொய்ம்மை தான்.அறியேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற மிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே மிகஅறிவேன் எனினும்எனை விடுதி ஆயில் பகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப் பாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே (7) நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர் நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும் எட்டுனைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல் கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான் கண்டறிந்தேன். எனினும்அவை காட்ட வேண்டும்