பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந் திருமுறைப் பாடல்கள் 缘 185 笨 தேனே அமுதே முதலா கியதெய்வ மேரீ தானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரனே (11) இம் மூன்று பாடல்களும் முக்கனிபோல் இனிப்பவை. உரிய ஓசையில் பாடி அநுபவித்தால் வள்ளல் பெரு மான் காட்டும் சரணாகதி நெறி தட்டுப்படும். 17. தனித் திருப்புலம்பல்: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பால் அமைந்த நான்கு திருப் பாடல்களைக் கொண்டது இப்பதிகம். இறைவனைத் தாம் எண்ணாதிருந்தமைக்காக வருந்தி அடிகள் புலம்பு வதாக அமைந்தவை இப்பாடல்கள். இரண்டை ஈண்டுக் காட்டுவேன். திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனை செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே (1) ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப் பெருமை கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை அருமைக் களத்தில் கருமை அணி அம்மான் தன்னை எம்மானை இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே (3)