பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篆 186 霹 இராமலிங்க அடிகள் 'என்னே எண்ணா திருந்தேனே' என்று இறும் பாடல் களை அழுது புலம்பிப் பாடினால் வள்ளல் பெருமன் அநுபவத்தைப் பெற முயலலாம். 19. திருப்புகழ்ச்சி. எம்பெருமானைப் புகழ்ந்து பாடு தல் ஒரு தனிப் பெரும் மகிழ்ச்சியை அளிப்பது. இப்பதிகத்தில் மூன்றே பாடல்கள்தாம் உள்ளன. முதற் பாடலும் மூன்றாம் பாடலும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பிலும் இரண்டாம் பாடல் எண் சீர்க் கழிநெடிலடி யாப்பிலும் அமைந்தவை. மூனறு பாடல்களையும் முறையே தருவோம். திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன் சிறியரிற் சிறியனேன் வஞ்சக் கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய கன்மனக் குரங்கனேன் அந்தோ வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே விரும்பி.ஆட் கொள்ளுதல் வேண்டும் மருவுமா கருனைப் பெருங்கடல் அமுதே வள்ளலே என்பெரு வாழ்வே (1) தாயும தந்தையும் தெய்வமும் குருவும் தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும் ஆயும் இன்பமும் அன்புமெய் அறிவும் . அனைத்தும் நீளன ஆதரித் திருந்தேன் ஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையோ . என்செய் வேன்.இதை யார்க்கெடுத் துரைப்பேன் சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய் தில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே (2) அருள்பழுத் தோங்கும் கற்பகத் தருவே அருள்மருந் தொளிர்குனக் குன்றே அருள்எனும் அமுதந் தரும்ஒரு கடலே அருட்கிர னங்கொளும் சுடரே