பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந் திருமுறைப் பாடல்கள் 岑 187 梁 அருள்ஒளி வீசும் அரும்பெறன் மணியே அருட்சுவை கனிந்தசெம் பாகே அருள்மனம் வீசும் ஒருதனி மலரே அருள்மய மாம்பர சிவமே (3) பாடல்கள் யாவும் பாடிய வாய் தேனூறும் பான் மையில் அமைந்துள்ளன. பக்தியுடன் உளங்கரைந்து ஒதினால் வள்ளல் பெருமான் பெற்ற அநுபவத்தை நாமும் பெறலாம். 22. சிவசிதம்பர சங்கீர்த்தனம்: இப்பதிகம் எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்த யாப்பில் அமைந்த ஐந்து பாடல்களைக் கொண்டது. பரசிவமாம் சிவசிதம்ப ரத்தை மனத்தில் அமைத்துக் கொண்டு பாடி மகிழும் பாங்கில் அமைந்தவை. இதில் இரண்டு பாடல்களைக் காட்டுவேன். உலக மும்சரா சரமும் நின்றுநின் றுலவு கின்றபேர் உலகம் என்பதும் கலகம் இன்றி.எங் கணுநி றைந்தசிற் கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும் இலக ஒன்றிரண் டெனல்அ. கன்றதோர் இணையில் இன்பமாம் இதயம் என்பதும் திலகம் என்றநங் குருசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம் (1) அருள்.அ எரித்துமெய் அன்பர் தம்மைஉன் அங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும் பொருள்.அ எரித்துநான் மறையின் அந்தமே புகழு கின்றதோர் புகழ்அ எளிப்பதும் வெருள்.அ எளித்திடா விமல ஞானவான் வெளியி லேவெளி விரவி நிற்பதாம் தெருள்.அ எளிப்பதும் இருள்கெ டுப்பதும் சிவசி தம்பரம் சிவசி தம்பரம் (4)