பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

崇 188 影 இராமலிங்க அடிகள் பாடல்கள் யாவும் சிவசிதம்பரம், சிவசிதம்பரம்’ என்றே இறுகின்றன. மனம் அதைச் சங்கீர்த்தனம்’ செய்து மகிழ்கின்றது; முக்தி உலக நாட்டத்தை நம்மி டம் உண்டாக்குகின்றன பாடல்கள்." 23. சிவகாமவல்லி துதி: இப்பதிகத்திலும் ஐந்து திருப்பாடல்களே அடக்கம். முதற் பாடல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பிலும், 2,3,4 எண்க எளிட்ட பாடல்கள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பிலும் ஐந்தாம் பாடல் கட்டளைக் கலித் துறை யாப்பிலும் அமைந்துள்ளன. மகன் ஒருவன் தாயைப் பாசத்தால் அணைவதுபோல அடிகளார் சிவ காம வல்லித் தாயிடம் அடைக்கலம் புகும் பாங்கில் பாடல்கள் அமைந்துள்ளன. அரங்காய மனமாயை அளக்கர் ஆழம் அறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றே இரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா எம்மனமோ நின்மனமும் இறைவி உன்றன் உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால் ஒடிஎங்கே புகுந்தெவருக் குறைப்ப தம்மா திரங்கானாப் பிள்ளை எனத் தாய்வி டாளே சிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே (1) திருவே திகழும் கலைமகளே திருவே மலையான் திருமகளே உருவே இச்சை மயமேமெய் உணர்வின் வனமே உயர்இன்பக் குருவே ஆதித் தனித்தாயே குலவும் பரையாம் பெருந்தாயே 1. இப்பாடல்களைக் கட்டளைக் கலிப்பா என்று தொழுவூர் வேலாயு முதலியா ரும் எழுசீர்க் கழிநெடிலடி சந்த விருத்தம் என்று ஆ.பாலகிருஷ்ண பிள்ளை யும் குறித்துள்ளனர்.