பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 案 3,鳍 தாங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே தூக்கிஎடுத் தனைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே . ---------- அருள்விளக்கமாலை - 45 என்பதால் அறியலாம். அந்த ஒருவர்தான் நடராசப் பெருமான். (2) பிள்ளைப் பெருமானுக்குப் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை. தமையனார் சபாபதிப் பிள்ளையே கல்வி புகட்டினார். சபாபதிப் பிள்ளையின் சொற்பொழி வுகளால் பெற்ற சிறிய வருவாயைக் கொண்டு குடும்பம் நடைபெற்றது. ஒருநாள் சொற்பொழிவில் ஏடு வாசிக் கும் பெண்மணி நோயுற்றதால் அந்தப் பணியை அண் ணியார் வேண்டுகோட்கிணங்க இராமலிங்கம் அதனை அற்புதமாக நிறைவேற்றிக் கேட்டோரையெல்லாம் மகிழ்வித்தார். (3) பிறிதொரு சமயம் சபாபதிப் பிள்ளை நோயுற்றி ருந்தபொழுது அவருக்குப் பதிலாக சொற்பொழிவை நிகழ்த்தி அவையை மகிழ்வித்தார். அன்று முதல் மக்கள் இராமலிங்கம் பொழிவைக் கேட்க விரும்பினர். (4) மற்றொரு சமயம் தம்பியின் பொழிவை மறைந் திருந்து செவிமடுத்தார். அன்று ஏடு படிக்கும் துணை யின்றி பொழிவை நிகழ்த்தினார். கேட்ட சபாபதி பீதிய டைந்து தம்பியைத் தெய்வமாகவே கருதி வரலாயினர், (5) கந்தக் கோட்டம் பழமையான கோயிலன்று. வேளுர் மாரி செட்டியாரும் கந்தப்ப ஆசாரியாரும் திருப்போரூர் சென்று வழிப்பட்டு வந்த பொழுது வழி யில் புற்றொன்றில் கண்ட முருகனது திருவுருவத்தை எடுத்து வந்து தாபித்த சிறு கோயிலே கந்தகோட்டம்! (சாலிவாகனசகம் 1595 - பிரமாதி ஆண்டு) பள்ளி செல்லாதும் வீட்டில் தங்காதும் திரிந்த பிள்ளைப் பெரு மான் கந்தகோட்டத்திற்குச் சென்று முருகனை வழிபட