பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓 192 等 இராமலிங்க அடிகள் இஃது இரண்டாவது பாடல். இது படிக்கக் கடினமா னது. இதற்கும் உரை தருவோம். பதவுரை: இரண்டே காற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு; ஐமுகம் - ஆசாரிய முகத்தினை; கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர்; என்னை - அடியானை; உடையீர் - உடையவரே; அம்பலத்தீர் - திருஅம்பலத்தில் நடிக்கின்றவரே; இரண்டே காற்கு - சூரிய கலை, சந்திர கலையாகிய வாசியநுபவத்திற்கு; ஐ - அழகிய; முகம்தந்தீர் - முகத்தினைத் தந்தவரே; என்னை இதுதானென்று - இஃது என் விஷயத்திற்கு என்று; உரைத்தேன் - செப்பினேன்; அதற்கு அன்னார் இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இரு கையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும்; எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த அப்பொழுதே நீ முன் உரைத்தவண்ணமே; இரண்டே காற்கு - வாசிக்கு, ஜம்முகம் கொண்டாய் - அழகிய முகத்தினை அநுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர். தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க. இரண்டே காற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை; உவகை. - இரண்டே காற்கை முகந்தந்தீர் என்றதற்கு, விநாயக ருக்கு துதிக்கையையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு சிறப்பு அன்றெனக் கொள்ளல் அமையும். ஆடுங் கருணைத் திருநடத்திர் ஆடும் இடந்தான் யாதென்றேன் பாடும் திருவும் சவுந்தரமும் பழமும் காட்டும் இடமென்றார்