பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 இராமலிங்க அடிகள் இற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர் என்னுடைய நாயகரே என்ஆசை இதுவே (10) இந்தப் பாடல்களை நாமும் அடிகள் நிலையில் பெண்ணாகப் பாவித்துக் கொண்டு ஒதினால் அடிகளா ரின் அநுபவம் நமக்கும் கிட்டும். 39. வேட்கைக் கொத்து: அடிகளார் தலைவி நிலையை அடைந்து தோழியோடு கூறுவனவாகப் பத் துப் பாடல்களைக் கொண்டது இப்பதிகம். அடிகளார் "பதிகம்’ என்பதற்குப் பதிலாகக் கொத்து’ என்ற சொல் லைப் பயன்படுத்தியுள்ளார். 'இளம் பருவத்தில் மாலையிட்டுத் தன்னிடம் காதலை எழுப்பி விட்டான்; மறித்தும் பாராது நழுவிவிட்டான். அவனை விடு வேனோ?” என்று தன் விடாப்பிடி வேட்கை உணர் வைப் புலப்படுத்துகின்றார். பாடல்கள் பத்தும் எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் அமைந்தவை. ஒவ்வொரு பாடலும் விடுவேனோ?’ என்ற சொல் இறுதியடியில் உயிர்நாடியாகப் பேசுகின்றது. இரண்டு பாடல்களில் ஆழங்கால்பட்டு அநுபவிப்போம். என்னுயிரில் கலந்துகலந் திணிக்கின்ற பெருமான் என்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராசன் தன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான் தனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான் பின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ கன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்.உண்டோ அவன்றன் கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழி (3) தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே தலைவரெலாம் வனங்கநின்ற தலைவன்நட ராசன்