பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹 2O6 爱 இராமலிங்க அடிகள் சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு தமியேன்செய் குற்றமெலாம் சம்மதமாக் கொண்டு கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங் கண்டும.கி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப் பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே (15) நான்கேட்கின்றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதிஅணிந்த சடைமுடிவும் இறைவா தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய் சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய் மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே (20) ஏதும்அறி யாதிருளில் இருந்தசிறி யேனை எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து ஒதுமறை முதற்க்லைகள் ஒதாமல் உணர உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித் தீதுநெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத் திருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும் போதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம் போக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே (25) மன்னியபொன்னம்பலத்தே ஆனந்த நடஞ்செய் மாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி னியே தன்னியல்பின் நிறைந்தருளும் சத்துவபூ ரணமே தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே அன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே ஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே என்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே எனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் கானே (29)