பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 笨 209 影 முன்னுதற்கோர் அணுத்துனையும் தரமில்லாச் சிறியேன் முகநோக்கிச் செழுமணப்பூ முகமலர்ந்து கொடுத்தாய் துன்னுதற்கிங் கரிதாம்நின் திருஉள்ளக் குறிப்பைத் துணிந்தறியேன் என்னினும்ஒர் துணிவின் உவக் கின்றேன் பொன்னுதற்குத் திலகமெனும் சிவகாம வல்லிப் பூவைஒரு புறங்களிப்பப் பொதுநடஞ்செய் பொருளே (10) இந்தப் பாடல்களை இசையூட்டிப் பாடி அநுபவித்தால் வள்ளலார் அநுபவத்தை நாமும் பெறலாம். இவற்றில் குறிப்பிட்ட நிகழ்ச்சி: ஒருநாள் அடிகள் அன்பர்கள் புடைசூழ இருந்தபோது இறைவன் எழுந்தருளி அங்கி ருந்த மற்றவர்க்கெல்லாம் திருநீறு அளித்து அடிகளை நோக்கிப் புன்னகைத்துத் திருநீற்றுப் பையிலிருந்து செஞ்சுடர்ப் பூ ஒன்றை அளித்தருளினார். அச்சுடர்ப் பூவைப் பெற்ற அடிகள் திருநீறும் தருக!' என வேண்ட, இறைவன் 'அன்று. உனக்கு திருநீறு அளித்த னம்; இன்று இதனை அளித்தோம்’ என்று சொல்லிச் சென்றார். பாடல்களில் செஞ்சுடர்ப்பூ, மணச் செழும்பூ, அருண்மணப்பூ, செழுமணப்பூ என்றும் குறிக்கப் பெற்றுள்ளன. இத்திருவருள் நிகழ்ச்சி அடிகள் பலரோடு இருக்கும்போது நடந்ததாகும். 4. ஆனந்த மாலை: அன்னை சிவகாமி உளங் களிப்ப ஆடலரசன் ஆனந்த நடனமாடுவதை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் பாடப் பெற்ற பத்துப் பாடல்களைக் கொண்டது இந்த மாலை. படிப் போரின் உள்ளத்தைக் கரைக்கச் செய்யும் பான்மை யுடையவை. நான்கு பாடல்களில் ஆழங்கால்பட்டு மகிழ்வோம். திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென் சிந்தையிலே புகுந்துநின்பால் சேர்ந்துகலந் திருந்தாள் தெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை சிவகாம வல்லிபெருந் தேவி.உளங் களிப்பப் இராம.-15