பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 210 案 இராமலிங்க அடிகள் பொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே பருவரல்சுற் றடிச்சிறியேன் பெருவரம்பெற் றுனையே பாடுகிறேன் பெரியஅருட் பருவமடைந் தனனே (1) அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல் அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி தெருடுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாம வல்லிபெருந் தேவி.உளங் களிப்ப மருளுடைய மாயையெலாம் தேயமணி மன்றின் மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தனன்என்றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே (3) அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள் அகிலாண்ட வல்லிசிவா னந்திசெளந் தரிசித் திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள் சிவகாம வல்லிபெருந் தேவி.உளங் களிப்ப மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில் மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன் புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும் புண்ணியரெல் லாம்.இவன்ஒர் புதியன்எனக் கொளவே (6) தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை தற்பரை'அம் பரைமாசி தம்பரைசிற சத்தி சின்னவயதினில்என்னை ஆளநினக் கிசைந்தாள் சிவகாம வல்லிபெருந் தேவி.உளங் களிப்ப மன்னியபொன் மணிப்பொதுவில் இன்பநடம் புரிந்து வயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை உன்னிஉவந் துனர்ந்துருகிப் பாடுகின்றேன் எங்கள் - உடையானே. நின்னருளில் அடையாளம் இதுவே (10) - - - பாடல்களை உளம் உருகப் பாடினால் வள்ளல் பெருமான் பெற்ற அநுபவத்தை நாமும் பெறலாம்.