பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 案 2往t 宰 5. பத்தி மாலை. வள்ளல் பெருமான் பத்தி நிலையை அவர்தம் சொற்களாலேயே காட்டுவது இப் பதிகம். எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் 'இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்த சிவக்கொழுந்தே ’ என்று இறுவது. நான்கு பாடல்களில் ஆழங்கால்படு வோம். அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன் அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும் தெருளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும் தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே இருளுடைய நிலையும்.இதற் குருகல்அரி தலவே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே (1) ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன் அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து வாளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே வலித்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும் நீளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும் நிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே எளுடைய மலையும்.இதற் குருகல்அரி தலவே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே (3) ஆண்டவநின் அருளருமை அறுயாதே திரிந்தேன் அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து வேண்டிஎனை அருகழைத்துத் திரும்பவும்என் கரத்தே மிகஅளித்த அருள்வண்ணம் வினையுடையேன் மனமும் காண்தகைய கண்களும்விட் டகலாதே இன்னும் காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன் ஈண்டுருகாக் கரடும்.இதற் குருகல்அரி தலவே - இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே (6)