பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 露 5 攀 கந்தகோட்டத்துப் பெருமானைக் கவிபாடி வழிபடுத லையும் கண்ட முதலியார் அவர்கள் அடிகளாருக்குக் கற்பிப்பதைக் கைவிட்டார். அடிகளார் ஒதாது உணர்ந்த மைக்கு அகச்சான்று நிறைய உள்ளன. ஒன்றிரண்டு காட்டுவோம். 'கற்றது மற்றவ்வழி (4. அன்புமாலை - 14) என்ற பாடலில், எற்றதும்பு மணிமன்றில் இன்பம்நடம் புரியும் என்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால் கற்றதுநின் னிடத்தேயின் கேட்டதுநின் னிடத்தே என்ற அடிகளால் அறியலாம். மேலும் "ஏதும் அறியா திருளில் (மேலது-25) என்ற பாடலில், ஒதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர உணர்விலிருந்துணர்த்தி அருள் உண்மைநிலை காட்டி என்ற அடியாலும் இஃது உணரப் பெறும். விரிவஞ்சி அவை காட்டப் பெறவில்லை. (8) ஒன்பதாம் அகவையில் இறைவனால் ஆட் கொள்ளப் பெற்ற செய்தியை வேண்டாமை வேண்டு கின்றார் (2. அடிமைப் பதிகம்-3) என்ற் பாடலின் ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட அருட்கட்லே என்உள்ளத் தமர்ந்த தேவே என்ற அடியாலும், "வேண்டார் உளரோ” (6. வாதனைக் கழிவு 7) என்ற பாடலின், தூண்டா விளக்கே திருப்பொதுவிற் சோதி மணியே ஆறொடுமூன் றாண்ட வதிலே முன்னென்னை யாண்டாய் கருணை யளித்தருளே என்ற அடியாலும் அறியலாம்.