பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 缘 213 常 முத்தியெலாம் தரவிளங்கும் முன்னவநின் வடிவை மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டால் போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல் பத்தினலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும் படிதான்எப் படியோ இப் படிஎன்ப தரிதே. (4) தேன்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள் சிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில் வான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன் மனங்கொண்ட காலத்தே வாய்த்தஅது பவத்தை நான்மொழிய முடியாதேல் அன்ப்ர்கண்ட காலம் நண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார் நூன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான நோக்குடையார் நோக்கினிலே போக்கியமெய்ப் பொருளே (6) என்பிழையா வையும்பொறுத்தாள் என்னைமுன்னே அளித்தாள் இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே இன்பவடி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம் இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன் அன்புறுவாய் அது.அதுவாய் அளித்தபழம் ஆகி அப்பழச்சா றாகி,அதன் அருஞ்சுவையும் ஆகி என்புருக மனஞான மயமாகும் என்றால் எற்றேரமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே (10) அற்புதமான பாடல்கள். அனைத்தும் தம் சொந்த அநுபவத்தில் விளைந்தவை. அருட்பாத் திருமுறைகளி லுள்ள பாடல்கள் அனைத்தும் சொந்த அநுபவ விளைச் சல்களாக இருப்பினும் ஐந்தாம் திருமுறைக்கு ஒரு சிறப் பான இடம் உண்டு. அடுத்து வரும் அதிசய மாலையி லும் அபராத மன்னிப்பு மாலையிலும் உளள பாடல் கள் தமக்கும் எம்பெருமானுக்கும் உள்ள மிக்க நெருக் கத்தைக் காட்டுவன.