பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 零 221 零 பெருமண நல்லூர்த் திருமணங் காணப் பெற்றவர் தமையெலாம் ஞான உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே (10) என்ற பாடலில் காணப் பெறுவதை அறிந்து மகிழலாம். நு Д5 مقي மேலும் வருத்தமில்லாத வகையொன்றைத் தமக் குத் தெரிவித்தருளினமையை, செவ்வகை ஒருகால் படுமதி அளவே செறிபொறி மனம்.அதன் முடிவில் எவ்வகை நிலையும் தோற்றும்நீ நினக்குள் எண்ணிய படிஎலாம் எய்தும் இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன் றெனக்கருள் புரிந்தசற் குருவே தெவ்வகை அமண இருளற எழுந்த தீபமே சம்பந்தத் தேவே (8) என்ற பாடலால் தெளிந்து மகிழலாம். 10. ஆளுடைய அரசுகள் அருண் மாலை: இப்பதிகம் எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பாடல்களைக் கொண்டது. இவற்றில் நம் அடிகள் ஆளுடைய அரசுகளின் அருளிச் செயலில் ஈடுபட்ட குறிப்புகளைக் கண்டு மகிழலாம். 'ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்’ என்ற திருப்புகலூர்த் திருத்தாண்டகத்தில் (எண்ணுகேன் என் சொல்லி (6.99:1) ஆளுடைய அரசுகள் அருளுவதை எண்ணி உருகும் அடிகள், கண்ணுளே விளங்குகின்ற மணியே சைவக் கனியேநா வரசேசெங் கரும்பே வேதப் பண்ணுளே விளைந்தஅருட் பயனே உண்மை பதியோங்கு நிதியேநின் பாதம் அன்றி