பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

寮 222 零 இராமலிங்க அடிகள் விண்ணுளே அடைகின்ற போகம் ஒன்றும் விரும்பேன்என் றனையாள வேண்டுங் கண்டாய் ஒண்ணுளே ஒன்பதுவாய் வைத்தாய் என்ற உத்தமனே சித்தமகிழ்த்துதவு வோனே. (5) என்ற பாடலில் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு மகிழ லாம். அருளிச் செயலில் ஈடுபட்ட பொது அநுபவங்க ளைக் குறிப்பிடும் சில பாடல்களைக் காண்போம். திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தில் ஓங்கும் சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ ஒளிவிளங்க நாவரசன் றொருபேர் பெற்றுப் பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட புண்ணியனே தண்ணியசீர்ப் புனித னோன் கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக் கடலேநின் கழல்கருதக் கருது வாயே (1) தேவரெலாம் தொழுந்தலைமைத் தேவர் பாத திருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான நாயகனே நல்லவர்க்கு நண்ப னோம் பாவமெலாம் அகற்றிஅருட் பான்மை நல்கும் பண்புடைய பெருமானே பணிந்து நின்பால் மேவவிருப் புறும்அடியர்க் கன்பு செய்ய வேண்டினேன் அவ்வகைநீ விதித்திட் டாயே (3) ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும் ஓர்கிலேன் சிறியேன்.இவ் வுலக வாழ்வில் ஆங்காரப் பெருமதமால் யானை போல அகம்பாவ மயனாகி அலைகின் றேன்.உன் பாங்காய மெய்யடியர் தம்மைச் சற்றும் . பரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ நீங்காய செயலனைத்தும் உடையேன் என்ன செய்வேன்சொல் லரசேனன் செய்கு வேனே (6)