பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 苓 225 篆 ஊழியல்இன் புறுவதுகாண் உயர்கருனைப் பெருந்தகையே (5) என்று போற்றியருளியுள்ளதைக் கண்டு மகிழலாம். நாவலூரார் கயிலாயத்திற்குச் சென்றபோது யானை மீது எழுந்தருளிய திருக்கோலத்தைக் காணப் பெரும் பேறு பெறாமைக்கு வருந்திய நிலையை, வான்கான இந்திரனும் மாலயனும் மாதவரும் தான்கான இறையருளால் தனித்தவள யானையின்மேல் கோன்கான எழுந்தருளிக் குலவியநின் கோலமதை நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே (6) என்று உருகுவதை இந்தப் பாடலில் கண்டு நாமும் உருகலாம். நாவலூராரின் திருப்பாட்டைத் தாம் நாடோறும் பெற்ற அநுபவத்தை உரைக்கின்றார் ஒரு பாடலில். அப்பாடல், தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும் நான்படிக்கும் போதென்னை நான்அறியேன் நாஒன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அநுபவங்காண் தனிக்கருனைப் பெருந்தகையே (7) என்பது. இப்பாடலை மனமுருகிப் படித்தால் இப்பாட் டநுபவம் நம்மிடமும் எழும். இராம.- 16