பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笨 228 露 இராமலிங்க அடிகள் யில் கூறுவதே படி முறையைக் காட்டுவதை அறிகின் றோம். திருவாசகம் திருஅண்டப் பகுதியில் காணப் பெறும், ‘என்னையும் இருப்பதாக்கினன் (அடி 179) என்ற அடிக்குப் பொருளைத் தமக்கு விளக்கியருள வேண்டும் என்று பெருமானையே அடிகள் வேண்டு ഖ്ങും ** ---- உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற திருஅண்டப் பகுதி.எனும் திருஅகவல் வாய்மலர்ந்த குரு.என்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ இருஎன்ற தனிஅகவல் எண்ணம்எனக் கியம்புதியே (4) என்ற பாடலில் கண்டு மகிழலாம். திருஅண்டப் பகு தியை உருஅண்டப் பெருமறை என்று உலகமெலாம் புகழ்கின்ற திருஅண்டப் பகுதி என்று சிறப்பித்தமை காணத்தக்கது. கருதத்தக்கது. அடிகளாரின் திருப் பாடல்களுள் திருவாசகத் தொடர்கள் அதிகமாக ஆளப் பெற்றிருப்பது அவர்தம் திருவாசக ஈடுபாட்டைக் காட்டி நிற்கும். தமது வாட்டமெலாம் வந்தொருகால் மாற்ற வேண் டும் என்று பெருமானை அடிகள் வேண்டுவதை, 3. திருவாசகத்தை உளங்கரைந்து அநுபவித்தவர் மூவர். ஒருவர் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள். மற்றொருவர் அருட்பிரகாச வள்ளலாராம் நம் சுவாமிகள். மூன்றாமவர் டாக்டர் ஜி.யு.போப்.