பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 岑 231 密 மணிவாசகப் பெருமான் கண்ட மதுரை நிகழ்ச்சி களை ஒரு பாடலில் அநுபவித்து நெஞ்சம் நெக்குருகி அநுபவிக்கின்றார் அடிகள். பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல் எண்சுமந்து நின்றதும்ஒர் எய்தியதும் வைகைநதி மண்சுமந்து நின்றதும்ஒர் மாறன் பிரம்படியால் புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே (9) என்ற பாடலை நாம் உளம் கரைந்து பாடினால் நாமும் அடிகள் பெற்ற அநுபவத்தை அடைந்து மகிழலாம். மணிவாசகப் பெருமானின் மணிவாக்கு பறவை களையும் விலங்குகளையும் மெய்ஞ்ஞானத்தின்பால் செலுத்தவல்லது என்பதை இம்மாலையின் இறுதிப் பாடலில் தெரிவிக்கின்றார். வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக் கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னில்இங்கு - நானடைதல் வியப்பன்றே (10) என்பது அப்பாடல். இங்ஙனம் நால்வர்பால் அடிகள் கொண்ட நாட்டம் சிறப்பிக்கப் பெற்றது. ஐந்தாம் திருமுறை ஏனையவற்றிலும் சிறியது என் றாலும் அவற்றிலுள்ள பாடல்கள் நம் மனத்தை மாணப் பெரியதாக நெகிழ்விப்பதை அறிய முடிகின்றது.