பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஆறாம் திருமுறைப் பாடல்கள் ஆறாம் திருமுறை மிகப் பெரியது. தோட்டத் தில் பாதி கிணறு என்றாற்போல, ஐந்து திருமுறைகளி லும் உள்ள பாடல்களின் அளவு இதில் அடங்கியுள் ளன. இதில் அடங்கிய பதிகங்கள் 144; பாடல்களின் தொகை 2552. இவற்றுள் அகப்பொருள் பதிகங்கள் பதினொன்று. பாடல்களின் தொகை 217. இவை தவிர, இசைப் பாடல் வகையில் முப்பத்தேழு பதிகங்கள் உள்ளன. இவை பல்வேறு வகைகளில் அமைந்திருந்த போதிலும் சிந்து வகைப் பாடல்களே அதிகமாக உள் 6YröᏑᎢ . இனி, இத்திருமுறையில் உள்ள பாடல்களை நோக் குவோம். ஐந்து திருமுறைப் பாடல்களைப் பயிலும் போது மேல்நோக்கிக் கிளம்பும் வானூர்தி தரையில் சிறிது தூரம் ஒடுவதைப் போலவும், ஆறாம் திருமுறைப் பாடல்களைப் பயிலும் போது தரையில் ஒடிக் கொண் டிருந்த வானூர்தி விண்ணில் எழுவது போலவுமான அநுபவத்தைப் பெறுவதை உணர முடிகின்றது. 1. தன்னிலையிலிருந்து அநுபவித்தவை 1. பரசிவ வணக்கம்: இது முதற் பதிகமாகத் தொடங்கு கின்றது. இதில் மூன்று பாடல்கள அடக்கம். எல்லாம் செயல்கூடும் என்ஆனை அம்பலத்தே எல்லாம்வல் லான்தனையே ஏத்து (1) இது குறள் வெண்பா. பொருள் வெளிப்படை.