பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 苯 233 笨 திருவிளங்கச் சிவயோக சித்தினலாம் விளங்கச் சிவஞான நிலைவிளங்கச் சிவாதுபவம் விளங்கத் தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம் மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே (2) அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்தபேர் ஒளியே அன்புரு வாம்பர சிவமே (3) மூன்று பாடல்களும் பரசிவ வணக்கமாகும். நாமும் இவற்றைத் துதித்து நூலுக்குள் புகுவோம். 3. ஆற்றாமை: வள்ளல் பெருமான் தம் குறைகளை யெல்லாம் பட்டியலிட்டுப் பாடல்களில் காட்டிடுகின் றார். இத்தகைய கொடியவன், அம்பலக் கூத்தன் திருக் குறிப்பினுக்கு ஆற்றாமையால் கலக்கமுறுவதைப் பாடல்கள் கூறுகின்றன. பாடல்கள் யாவும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் நடைபெறுகின் றன. இப்பதிகம் பத்துப் பாடல்களைக் கொண்டது. கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லா கன்மனக் குரங்கனேன் கடையேன். நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் நீசனேன் பாசமே உடையேன் -