பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 234 梁 இராமலிங்க அடிகள் நடுமைஒன்றறியேன் கெடுமையிற் கிளைத்த நச்சுமா மரம்எனக் கிளைத்தேன் கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட கடவேனே (3) செடிமுடிந் தலையும் மனத்தினேன் துன்பச் செல்லினால் அரிப்புண்ட சிறியேன் அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன் அறிந்தவர் தங்களை அடையேன் படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர் பணத்திலும் கொடியனேன் வஞ்சக் கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே (5) கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காமப் பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச் செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தியரில் தீயனேன் பாபக் கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினிற் கென்கட வேனே (10) இப்பதிகப் பாடல்கள் அனைத்தும் 'அம்பலக் கூத் தன் குறிப்பினுக் கென்கட வேனே என்ற தொடரால் இறுகின்றன. இத்தொடர் உணர்ச்சியின் பிழம்பாக ஒளிர்வதைக் கண்டு இறுபூதடைகின்றோம். 5. மாயை வலிக் கழுங்கல்: மாயை என்பது ஒரு தத்துவம். மயக்கும் தன்மையுள்ள அனைத்தும் மாயை யுள் அடங்கும். மாயையில் தவறாக அழுந்திக் கிடக்கும் தம் நிலைமைக்கு வருந்தி, தம் குறைகளைப் பொறுத்துத் தம்மை ஆட்கொள்ளுமாறு பரமனை வேண்டுவதாக அமைந்தவை இப்பதிகப் பாசுரங்கள் பத்தும். இவை யாவும் எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. சில பாடல்களில் ஆழங்கால் படுவோம்.