பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 笨 235 影 தாவு மான்எனக் குதித்துக்கொண் டோடித் தைய லார்முலைத் தடம்படுங் கடையேன் கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன் ஒவு றாதுழல் ஈஎனப் பலகால் ஒடி ஒடியே தேடுறும் தொழிலேன் சாவு றாவகைக் கென்செயக் கடவேன் தந்தை யே.எனைத் தாங்கிக்கொண் டருளே (1) மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன் வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன் இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன் ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன் குதத்தி லேஇழு மலத்தினுங் கடையேன் கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன் சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன் தெய்வ மேஎனைச் சேர்த்துக் கொண் டருளே (4) கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக் கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன் கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த கழுதை யேன்.அவப் பொழுதையே கழிப்பேன விடியு முன்னரே எழுந்திடா துறங்கும் வேட னேன்முழு மூடரில் பெரியேன் அடிய னாவதற் கென்செயக் கடவேன் அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே (5) வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர்பொதி ம்ாடென உழன்றேன் பருத்த ஊனொடு மலம் உணத் திரியும் பன்றி போன்றுளேன். நன்றியொன் றறியேன் கருத்தி லாதயல் குரைத்தலுப் படைத்த கடைய நாயினிற் கடையனேன் அருட்குப் பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன் புண்ணி யாளனைப் புரிந்துகொண் டருளே (7)