பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 236 笨 இராமலிங்க அடிகள் இருளை யேஒளி எனமதித் திருந்தேன் இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன் மருளை யேதரு மனக்குரங் கோடும் வனமெ லாம்.சுழன் றினம்எனத் திரிந்தேன் பொருளை நாடுதற் புந்திசெய் தறியேன் பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்தன் அருளை மேவுதற் கென்செய்க் கடவேன் அப்ப னோனை ஆண்டுகொண் டருளே (10) வள்ளல் பெருமான் தியானத்திலிருந்து எழுந்தவு டன் இந்தப் பதிகத்தையும், இதுபோன்ற பிற பதிகங்க ளையும் பாடியிருத்தல் வேண்டும். அவர்தம் வாழ்க் கையை அறிந்த நாம் அவர் யாதொரு குற்றமும் புரிய வில்லை என்பதை அறிவோம். நமக்காக அவர் பாடி யுள்ளார் என்று கருதி நாம் இறைவனை வேண்டுவோம் நம் குறைகளைப் பொருத்தருளுமாறு. 6. முறையீடு: இஃது இறைவன்முன் சமர்ப்பிக்கப் பெறும் விண்ணப்பம். தமது அறியாமைக்கு என்ன செய்வதென்று புரியாத நிலைக்கு வருந்துவதாக அமைந்த பத்து பாடல்களைக் கொண்டது இப்பதிகம். பாடல்கள எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. ஒவ்வொரு பாடலும் 'யார்க்கு ரைப்பேன்? என்ன செய்வேன்? ஏதும் அறிந்திலனே' என்ற தொடர்களால் இறுகின்றது. சில பாடல்களில் ஆழங்கால் படுவோம். மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன்றறியேன் மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன் திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான் செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஒர் இடத்தே இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ