பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

崇 238 零 இராமலிங்க அடிகள் 8. ஆன்ம விசாரத் தழுங்கல்: பொதுவாக ஆன்மா பற்றிய ஆய்வில் அழுங்கலாகும் இப்பதிகம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத் துப் பாடல்களைத் தன்னகத்தே கொண்டது. தம் குறை களையெடுத்துக் கொள்ளாமல், தம்மீது சினமும் கொள் ளாது காக்க வேண்டும் என்று விண்ணப்பிக்கும் போக் கில் பாடல்கள் அமைந்துள்ளன. சில பாடல்களில் ஆழங்கால் படுவோம். போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன் ஏகமே பொருள்என்றறிந்திலேன் பொருளின் இச்சையால் எருதுநோ வறியாக் காகமே எனப்போய்ப் பிறர்தமை வருத்திக் களித்தபா தகத்தொழிற் கடையேன் மோகமே உடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்தருள் எனையே (1) பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப் புனர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார் பாப்பினும் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும் ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன் அன்பினால் அடுத்தவர் கரங்கள் கூப்பினும் கூப்பாக் கொடுங்கையேன் எனினும் கோபியேல் காத்தருள் எனையே (2) கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன் கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும் அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அறவுண்டு குப்பைமேல் போட்ட