பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 笨 241 够 வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய் (4) பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒரு பெரு வயிற்றுச் சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுயலா மாமுதற் பழத்தின் தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய் (6) தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் தவறவிட் டிடுவதற் கமையேன் கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் கொட்டினேன் குணமிலாக் கொடியேன் வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப மலங்கொட்ட ஓடிய புலையே பண்டுபோல் பசித்துரண் வருவழி பார்த்த பாவியேன் என்செய்வேன் எந்தாய் (9) உண்டியே விழைந்தேன். எனினும்என் தன்னை உடையவர் அடியனேன் உனையே அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்பநின் ஆணைநின் தனக்கே தொண்டுறாதவர்கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணைநினை அல்லால் கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய் (13) பாடல்களைப் பக்தியுடன் மனங்கரைந்து பாடி வள்ளல் பெருமானைப்போல் உய்யும் வகையை நாடு வோம். * - - - - - 12. பிள்ளைச் சிறுவிண்ணப்பம்: இப்பதிகத்தில் 24 பாடல்கள் அடக்கம். அனைத்தும் எழுசீர்க் கழிநெடிலடி இராம.-17