பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 崇 245 案 அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய் (21) கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத் தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புலைகொலை இரண்டும் ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய் (22) மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கனமும்தான் சகித்திட மாட்டேன். எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம் நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்.நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய் (23) இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை எனக்கிலை இவையெலாம் என்னுள் சிவையொடும் அமர்ந்த பெருந்தய நிதிநின் திருவுளத் தறிந்தது தானே - தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ தருதலே வேண்டும்.இவ் விச்சை நவைஇலா இச்சை எனஅறி. விக்க அறிந்தனன் நவின்றனன். எந்தாய் (24) பாடல்களை பக்தியுடன் இசையூட்டி ஓதிஓதி வள் எல் பெருமான் பெற்ற அநுபவத்தை நாமும் பெற முயல்வோம்.