பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓 246 笨 இராமலிங்க அடிகள் 13. பிள்ளைப் பெருவிண்ணப்பம்: இப்பதிகத்தில் 133 பாடல்கள் அடக்கம். அனைத்தும் எழுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தால் அமைந்தவை. முற்பகு தியைப் போலவே இப்பகுதிப் பாடல்களும் அதே போக்கில் அமைந்துள்ளன. இப்பகுதிப் பாடல்களிலும் வள்ளல் பெருமான் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் உள்ளன. இவ்விண்ணப்பத்தில் 25 பாடல்களில் ஆழங் கால் படுவோம். - - தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது தந்தையே திருச்சிற்றம் பலத்தே களிப்பெறுங் கருணைக் கடவுளே அடியேன் கருததின் துரைக்கும்விண் ணப்பம்; இனிப்புறும் நினது திருவுளத் தடைந்தே எனக்கருள் புரிகநீ விரைந்தே! இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் இணைமலர்ப் பொன்னடி ஆணை (1) திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே திகழ்கின்ற செல்வமே அன்பர் பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் பண்பனே பரையிடப் பாகா பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற பேரருட் சோதியே எனக்கே உரியதல் தந்தை வள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே (2) என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த இறைவனே திருச்சிற் றம்பலத்தே - என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங் கீகுதும் என்றஎன் குருவே என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்குபேர் ஒளியே. என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்திங் கேற்றருள் திருச்செவிக் கிதுவே (6)