பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 影 247 岑 கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண்ணுதல் கடவுளே என்னைப் பெற்றதாய் நேயர் உறவினர் துனைவர் பெருக்கிய பழக்கமிக் குடையோர் மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட தோறும்அப் பிரிவை உற்றுநான் நினைக்கும் தோறும்.உள் நடுங்கி உடைந்தனன் உடைக்கின்றேன் எந்தாய் (16) தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் தாய்க்குநால் என்பதை இரண்டாய் வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வளர்ந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில் குழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன் காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன் கலங்கினேன் அதுநினைந் தெந்தாய் (21) பல்லிகள் பலவா யிடத்தும் உச் சியினும் பகரும்நேர் முதற்பல வயினும் சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் சொல்லுகின்றனவோஎனச் சூழ்ந்தே மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வெங்குழல் செயுந்தொறும் எந்தாய் வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல வருந்தினேன் எந்தைநீ அறிவாய் (23) காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல் கேட்டுளங் குலைந்தேன் தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன் விக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் விக்கலால் மயங்கினேன் விடத்தில் ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் (24)