பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑 248 案 இராமலிங்க அடிகள் களிப்புறு சுகமாம் உணவினைக் கண்டகா லத்தும் உண்டகா லத்தும் நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான் நேர்ந்தபல் சுபங்களில் நேயர் அளிப்புறு விருந்துண் டமர்களின் றழைக்க அவர்களுக் கண்பினோ டாங்கே ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய் (29) தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் தொழிலிலே வந்தகோ பத்தில் சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த தருணம்நான் கலங்கிய கலக்கம் வகுப்புற நினது திருவுளம் அறியும் மற்றுஞ்சில் உயிர்களில் கோபம் மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம் மெய்யநீ அறிந்ததே அன்றோ (36)" கோபமே வருமோ காமமே வருமோ கொடியமோ கங்களே வருமோ சாயமே அனைய தடைமதம் வருமோ தாமதப் பாவிவந் திடுமோ பாபமே புரியும் லோபமே வருமோ பயனில்மாற் சரியவந் திடுமோ தாபஆங் கார மேஉறு மோஎன் றையநான் தளர்ந்ததும் அறிவாய் (8) கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம் வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய் 5. சிறுவர்கட்குக் கல்விக் கற்பித்தபோது அவர்தம் சிறு குறும்புகளைச் சகியாது அடித்துவிட்ட அநுபவம்.