பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宗 250 案 இராமலிங்க அடிகள் நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய் களத்திலே திரிந்துற்ற இளைப்பை எட்டிலே எழுத முடியுமோ இவைகள்' எந்தைநீ அறிந்தது தானே (58) காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போதெலாம் பயந்தேன் ஏணுறு மாடு முதல்பல மிருகம் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன் கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளம் குலைந்தேன் வீனுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன் (60) வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் வதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன் ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன் (62) ஐயநான் ஆடும் பருவத்திற் றானே அடுத்தநன் னேயனோ டப்பா பொய்யுல காசை எனக்கிலை உனக்கென் புகல்என அவனும்அங் கிசைந்தே மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது மெய்யருள் மீட்டிட மீண்டேம் துய்யதின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்றுநான் சொல்லுவ தென்னே (76) 7. சென்னை வாழ்வை நீத்து கருங்குழியை அடைந்த வரலாறு இதில் காட்டப் பெறுகின்றது.