பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑 252 颚 இராமலிங்க அடிகள் மாயையால் வினையால் அரிபிர மாதி வானவர் மனமதி மயங்கித் தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ ஆயினும் தீய இவைஎன அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை நெறிக்கழ கல்லவே எந்தாய் (93) கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என் காதிலே கிடைத்தபோ தெல்லாம் மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம் மரபினர் உறவினர் தமக்குள் உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி ஒடிப்பார்த் தோடிப்பார்த் திரவும் எற்றிரு பகலும் ஏங்கிநான் அடைந்த ஏக்கமுந் திருவுளம் அறியும் (122) பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம்" உன்னிநின்றுரைத்தால் உலப்புறா ததனால் ஒருசில உரைத்தனன் எனினும் என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி மன்னிய சோதி யாவும்நீ அறிந்த . வண்ணமே வகுப்பதென் நினக்கே (126) என்னுயிர் காத்தல் கடன் உனக் கடியேன் இசைத்தவிண் ணப்பம் ஏற் றருளி உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள் உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே 8. அடிகளின் 12ஆம் அகவையில் ஞான வாழ்க்கை தொடங்கிய செய்தி இதில் குறிப்பிடப் பெறுகின்றது.