பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

案 260 崇 இராமலிங்க அடிகள் பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப் புண்ணியம் பொற்புறு வயங்க அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே அருட்பெருஞ் சோதிஎன் அரசே (18) இந்த ஏழு பாடல்களையும் உளம்கரைந்து ஒதினால் வள்ளல் பெருமான் அநுபவம் நமக்கும் கிட்டும். 29. சிற்சபை விளக்கம்: தில்லைச் சிற்றம்பலவன் திருச்சபையைக் காட்டுவது. எண்சீர்க் கழிநெடிலடி ஆசி ரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது. சோறு வேண்டினும் துகில்அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம் வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி மேவொ னாதெனும் மேலவர் உரைக்கே மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன் வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் சாறு வேண்டிய பொழில்வடல் அரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே (1) சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும் துட்ட னேன்.அருட் சுகப்பெரும் பதிநின் வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன் வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும் உன்னை விட்டயல் ஒன்றும்.உற் றறியேன் தாழ்வி லாதசி தருவடல் அரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே (3) தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச் சுகம்வி ழைந்திலேன் எனினும்பொய் உலக மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன் வள்ள லே உன்றன் மனக்குறிப் பறியேன்