பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 LC 案 இராமலிங்க அடிகள் ஏட்டாலும் கேளயல் என்பாரை நான்சிரித் தென்னைவெட்டிப் போட்டாலும் வேறிடம் கேளேன்என் நானைப் புறம்விடுத்துக் கேட்டாலும் என்னை உடையான் இடஞ்சென்று கேட்பன்என்றே நீட்டாலும் வாயுரைப் பாட்டாலும் சொல்லி நிறுத்துவனே. - மூன்.திருமுறை. திருவடுண் முறையீடு 31 என்று பாடி அவருக்கு அருட் செல்வத்தைப் போதித்து அனுப்பினார். (v) சங்கராசாரிய சுவாமிகளுடன் அடிகள் அளவ ளாவ நேரிட்டபோது சுவாமிகள் வடமொழியே எல்லா மொழிக்கும் தாய் என்று கூற, அடிகளார் அஃதுண்மை அன்றென மறுத்து, வடமொழி அனைத்து மொழிக்கு அன்னையாயின், அருந்தமிழ் அனைத்திற்கும் அப்ப னாகும் எனக் கூறித் தமிழின் சிறப்பை விரிவாக விளக்கி னாராம். - (9) அடிகளாரின் திருத்தணிகை வழிபாடு அவர்தம் கந்தகோட்டம் திருவொற்றியூர்ப் பகுதிகளோடும் இணைந்துள்ளது. தணிகை முருகன் ஒருமுகமாக எழுந் தருளியிருப்பினும் அடிகளாருக்கு ஆறுமுகங்களோடும் காட்சியருளினார். - - உருவ வழிபாட்டிலிருந்து அருவ வழிபாட்டிற்குச் செல்வது படிமுறை. முதலில் அடிகள் முருக உபாசக ராக இருந்தார். பின்னர் சிவபக்தரானார். பின்னர் அருப் பெருஞ்சோதி ஆண்டவரின் அடியரானார். கந்தகோம்ட முருகன், ஒற்றியூர் சிவபிரான் தில்லை ஆடலரசன், வடலூர்ப் பேரொளி என்பது அடிகள் சென்ற வழி.